லண்டன் அருகே ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் விபத்து: நர்ஸ் உள்பட 3 பேர் பலி

7.6.13

லண்டன் அருகே ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான விபத்தில் நர்ஸ் உள்பட 3 பேர் பலியாகினர்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட நோயாளியை கென்டுக்கி பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்துவிட்டு ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் ஒன்று கட்டுப்பாட்டு அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தது.
கிளே மாகாணத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை நெருங்கும்போது, திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறினால் நிலை தடுமாறிய ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது.
இதில், விமானி எட்டிசீச்மோர், முதலுதவி மருத்துவ ஊழியர் ஹெர்மன் லீ டாப்ஸ், நர்ஸ் ஜெசி ஜோன்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.
லண்டன் உள்நாட்டு விமான போக்குவரத்து துறை மற்றும் ஏர் எவாக் உயிர் காக்கும் படை அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துக்கள் :