பேஸ்புக் நிறுவனருக்கு 2.5 மில்லியன் டாலர் அபராதம்

4.6.13

1979-ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த சீன் பார்க்கர், தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகத் திகழும் 'பேஸ்புக்'கின் இணை நிறுவனர் ஆவார். 2012-ம் நிதியாண்டின்படி இவரது சொத்து மதிப்பு 2.1 பில்லியன் டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவர் கடந்த 1-ந்தேதி (சனிக்கிழமை) பாடல் எழுதுபவரும், பாடகியுமான அலெக்சாண்ட்ரா லேனாஸ் என்பவரை சான்பிரான்சிஸ்கோவில் திருமணம் செய்துகொண்டார். சீன் பார்க்கர் தனது திருமணத்திற்கென 10 மில்லியன் டாலர் செலவு செய்து ஆடம்பர மாளிகை, நீர்ப்பரப்பு போன்ற செயற்கை அமைப்புகளை உருவாக்கியிருந்தார். ஆனால், இவற்றுக்கு நகர நிர்வாகத்திடம் அவர் முறையான அனுமதி பெறவில்லை. கலிபோர்னியாவின் பாதுகாக்கப்பட்ட கடலோரப் பகுதியில் இவர் தன் திருமண நிகழ்ச்சிகளுக்காக இந்த பிரம்மாண்டமான அமைப்புகளை நிறுவியதால், கடலோர பாதுகாப்புக்குழு அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. அதன்பின்னர் பாதுகாப்பு குழவினரிடம் சமரசம் செய்துகொண்ட பார்க்கர், தன்னுடைய தவறுக்காக 2.5 மில்லியன் டாலர் செலுத்த ஒப்புக்கொண்டார். பாதுகாப்பு குறித்த விஷயங்களுக்காகத் தனது பணம் செலவிடப்படும் என்பதால் தான் மகிழ்ச்சி அடை வதாகப் பார்க்கர் தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் குழுவும், இந்தத் தொகை பொதுமக்களுக்குப் பயன்படும் விதத்திலும், மலையேற்றப் பயிற்சி களுக்காகவும் மற்றும் கடலோரப்பாதுகாப்பிற்கான மானியமாகவும் பயன்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :