20 ஆண்டு ஜெயிலில் இருந்து திரும்பிய தந்தையை குத்தி கொன்ற மகன்

13.6.13

தென்னாப்பிரிக்காவில் உள்ள போனிக்ஸ் என்ற இடத்தில் வசித்து வந்தவர் பெஞ்சமின் (வயது 46). இவர் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர். இவரது மகன் டேரன் படையாச்சி (25).
டேரன் சிறு குழந்தையாக இருந்தபோது பெஞ்சமின் ஒரு கொலை வழக்கில் கைதாகி ஜெயிலுக்கு சென்றார். 20 ஆண்டுகள் ஜெயிலில் இருந்து விட்டு சில மாதங்களுக்கு முன்புதான் வீடு திரும்பினார். அவர் வீட்டுக்கு வந்ததில் இருந்தே தந்தைக்கும், மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏறபட்டது.
இந்த நிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த டேரன் தந்தை பெஞ்சமினை கத்தியால் குத்தினார். இதில் பெஞ்சமின் உயிரிழந்தார்.

0 கருத்துக்கள் :