2 1/2 இலட்சம் தமிழர்களைக் கொல்ல துணை போனவருக்கு 12 இலட்சம் பேர் வாழ்த்தா?

9.6.13

சோனியாவின் சீலைத் தலைப்பை கடைசி வரை பற்றிப் பிடித்து 2 1/2 இலட்சம் ஈழத் தமிழ் மக்களை கொல்ல துணை போன கருணாநிதிக்கு 12 லட்சத்து 67 ஆயிரத்து 427 பேர் குறுஞ்செய்தி – இணையதளம் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளதாக அவரே அறிக்கை விட்டுள்ளார்.
கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமாக குறிப்பிட்டுள்ள விடயங்கள் வருமாறு,
ஜூன் 3 அன்று எனது 90-வது பிறந்த நாளினை கழக உடன் பிறப்புகள் சீரோடும் சிறப்போடும் கொண்டாடினர். தமிழகத்தில் தி.மு.க.வை தாண்டி, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தோழர்களும், தமிழ் மக்களும், தமிழ் ஆர்வலர்களும், தமிழ்க் கவிஞர் பெருமக்களும் எனது பிறந்த நாளையொட்டி பெருமை சேர்த்தனர்.
இந்தியத்துணை கண்டத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், தேசிய அரசியல் தலைவர்கள் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்து என்னை ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். எனது பிறந்த நாளையொட்டி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் வாழ்த்துச் செய்திகளை கடிதம் மூலமாகவும், தந்தி மூலமாகவும், குறுஞ்செய்தி – இணையதளம் என்று இன்னும் அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள்.
பிரிட்டன், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, கனடா, நார்வே, சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, சுவிடன், நெதர்லாந்து, போர்ச்சுக்கல், மெக்சிகோ, ஈரான், சீனா, தாய்லாந்து, குவைத் போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து இதுவரை 12 லட்சத்து 67 ஆயிரத்து 427 பேர் குறுஞ்செய்தி – இணையதளம் மூலம் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருக்கிறார்கள்.
மேலும், தபால் மூலமும், தந்தி மூலமும் 5 ஆயிரத்து 600 பேர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். தமிழக த்தில் மட்டுமல்லாமல் இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு இடங்களிலிருந்தும், உலகின் பல நாடுகளிலிருந்தும் எனது பிறந்த நாளினையொட்டி வாழ்த்துச் செய்திகளை அனுப்பி என்னை பெரு மைப்படுத்தியிருக்கும் ஆன்றோர், சான்றோர், தமிழ் உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதய பூர்வமான நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அளவிற்கு என்னிடத்தில் அன்பும், பாசமும் கொண்டுள்ளோருக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன் என்பதுதான் என் உள்ளத்தை இப்போது முழுவதுமாக ஆக்கிரமித் திருக்கிறது.
இது குறித்துதான் 5.6.2013 அன்று நான் எழுதிய உடன் பிறப்பு மடலில், இந்த அளவிற்கு என்னிடம் பாசத்தையும், அன்பையும் கொட்டுகிறார்களே, இவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? என்மனதாலும், செயலாலும் தொடர்ந்து உழைப்பேன், உழைப்பேன், தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் என்று உறுதி கூறி எழுதியிருந்தேன். அந்த வாக்குறுதியை வெளிநாட்டில் வாழும் உடன் பிறப்புகளுக்கும் காணிக்கை ஆக்குகிறேன்’’ என்று கூறியுள்ளார்.
வலிமையான முதலமைச்சர் நாற்காலியில் இருந்து கொண்டு கடைசி வரை சோனியாவின் ஆட்சிக்கும் அதிகாரத்துக்கும் முண்டு கொடுத்து ஈழத் தமிழினத்தை இலட்சக்கணக்கில் முள்ளி வாய்க்காலில் சமாதியாக்கிய உங்களை நாம் என்றும் மறவோம்….

0 கருத்துக்கள் :