ஐந்து மீனவர்கள் பலி: 17 பேரைக் காணவில்லை!

8.6.13

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 5 மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
மேலும் 20 க்கும் அதிகமான படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், அவற்றில் இருந்த 20 மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம் மேலும் தெரிவிக்கின்றது.
பலமான காற்றினால் 20 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 396 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.

0 கருத்துக்கள் :