காதலிப்பதாக கூறி 15 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 27 வயது இளைஞன்

22.6.13

வல்வெட்டித்துறையில் 15 வயதுச் சிறுமியொருவரை காதலிப்பதாக வாக்குறுதி அளித்து பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட 27 வயதுடைய இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

வல்வெட்டித்துறையில் கடந்த வாரம் 15 வயதுச் சிறுமியொருவரை அதே இடத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் காதலிப்பதாக வாக்குறுதி அளித்து பாலியல் துஸ்பிரயோம் செய்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக குறித்த சிறுமியின் பெற்றோர் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்துள்ளனர். இதற்கமைய பொலிஸார் குறித்த சந்தேக நபரைக் கைதுசெய்து நீமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இவ் வழக்கினை விசாரித்த பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி இச் சந்தேகநபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்திருக்குமாறு கட்டளையிட்டுள்ளார்

0 கருத்துக்கள் :