பார்வையற்ற 14 வயது சிறுமியை கற்பழித்த காமுகன்

5.6.13

குஜராத் மாநிலம், ஒதாவ் பகுதியை சேர்ந்த பார்வையற்ற 14 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் மொட்டை மாடியில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தாள்.
நள்ளிரவுக்கு மேல் அந்த மாடிக்கு வந்த மணிஷ் பர்மர்(25) என்பவன் சிறுமியின் வாயை துணியால் அடைத்து தனது வீட்டின் மொட்டை மாடிக்கு தூக்கிச் சென்றான்.

 அங்கே அவளை பலவந்தமாக கற்பழித்த அந்த கொடியவன், 'நடந்த சம்பவம் பற்றி யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன்' என்றும் மிரட்டினான்.
அவனிடம் இருந்து மீண்டு, தனது வீட்டின் மொட்டை மாடிக்கு தடுமாறியபடி வந்து சேர்ந்த அந்த சிறுமி பெற்றோரை எழுப்பி நடந்த சம்பவம் பற்றி கூறி அழுதாள்.
இதனையடுத்து, மணிஷ் பர்மர் மீது சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.


சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.
உறவினரின் வீட்டில் பதுங்கியிருந்த அவனை நேற்று கைது செய்து கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்

0 கருத்துக்கள் :