முதியோர் இல்லத்தில் 11 முதியவர்களை கொன்ற காவலாளி

13.6.13

ஸ்பெயின் நாட்டில் உள்ள ஜிரோனா என்ற இடத்தில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு ஆதரவற்ற நூற்றுக்கணக்கான முதியவர்கள் வசித்து வந்தனர். இவர்களில் சிலர் திடீரென இறந்தனர். அவர்கள் ஏன் இறந்தார்கள்? என ஆய்வு நடைபெற்றது. அப்போது அவர்கள் இயற்கையாக சாகவில்லை.

 கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்தது. அவர்களை அந்த இல்லத்தின் காலாளியாக இருந்தவரே கொலை செய்திருந்தார்.

இது தொடர்பாக அந்த காவலாளி கைது செய்யப்பட்டார். முதியவர்களின் தொல்லை தாங்கமல் அவர்களை கொலை செய்ததாக காவலாளி கூறினார். அவர்களில் பலர் மூச்சு திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். 3 பேருக்கு அதிக அளவில் மதுவை குடிக்க வைத்து கொலை செய்திருந்தார்

0 கருத்துக்கள் :