நான்கு பிள்ளைகளின் தாய் தீ வைத்து தற்கொலை

20.5.13

கே.புஷ்பராணி (வயது 32) என்ற இளம் தாயே இவ்வாறு பலியானவராவார். எனினும் மரணத்தில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் கணவனே மனைவிக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கலவானை பிரதேசத்தில் வேலை செய்து வந்த கணவர் சம்பவ தினத்தன்று இரவு 18 ஆயிரம் ரூபா சம்பள காசுடன் மது அருந்தி விட்டே வீட்டிற்கு வந்துள்ளார். பின் கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட தகராறிலே கணவன் மண்ணெண்ணை ஊற்றி தீயிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிள்ளைகளின் கூக்குரலைக் கேட்ட அயலவர்கள் பெண்ணை காவத்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் சிகிச்சை பயனளிக்காது இறந்துள்ளார். கணவனை இறக்குவானை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் சடலம் காவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

0 கருத்துக்கள் :