சீமான் சிறைசெல்லவே விரும்புகிறார்: சீமான் போன்றவர்கள் சுண்டைகாய்கள்

20.5.13


சீமான் போன்றவர்கள் தங்களைப் பொறுத்தவரையில் சுண்டைக்காய் போன்றவர்கள் என மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுவையில் ராஜிவ் நினைவு ஜோதி யாத்திரை வழியணுப்பு விழாவில் மத்திய மந்திரி நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சி மீதும், ராஜீவ்காந்தி மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். ராஜிவ் காந்தி 5 ஆண்டுகள் பிரதமராக பதவியில் இருந்த போது இந்தியாவை வல்லசராக்க அரும்பாடுபட்டார். அவருடைய காலத்தில் புதிய கல்வி கொள்கை, தொழில் கொள்கை, அறிவியல் கொள்கை ஆகியவை கொண்டு வரப்பட்டது. சமீபத்தில் திரைப்பட இயக்குனர் சீமான் கடலூரில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டார். விடுதலை புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கம். அதன் தலைவரின் புகைப் படத்தை பிரசுரித்து கூட்டம் நடத்த அவர் அனுமதி கேட்டார். ஆனால் அந்த கூட்டத்துக்கு தமிழக அரசு தடைவிதித்தது. இது நியாயமான சரியான நடவடிக்கை. சீமான் கூட்டத்தில் காஷ்மீர் தீவிரவாதி யாஸ்மின் மாலிக்கை அழைத்து வந்து பேச செய்துள்ளார். தீவிரவாதத்தையும், பிரிவனை வாதத்தையும் தூண்டுபவர்கள் தேச துரோகிகள். சீமானை பொறுத்த வரையில் பல முறை அவர் சிறைக்கு சென்றுள்ளார். தற்போது அவர் சிறைக்கு செல்லவே விரும்புகிறார். தமிழக அரசின் வழக்குக்கு பிறகு அவர் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும். நக்சலைட்டு தீவிரவாதத்தையும், அசாம் தீவிரதத்தையும் அடக்கி உள்ளோம். எங்களை பொறுத்தவரை சீமான் போன்றவர்கள் சுண்டை காய்கள். இந்தியாவில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக செயல்படுபவர்களை மக்க;s தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

0 கருத்துக்கள் :