வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த வைத்தியர்

25.5.13

கிழக்கு மாகாணத்தில் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அப்பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியினை வைத்து தைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் குறித்த பெண்ணுக்கு ஏற்;பட்ட வயிற்று வலி காரணமாக கடந்த 22 ஆம் திகதி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அப்பெண்ணின் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றுகுள் ஊசி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மீண்டும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்துவதற்காக அப்பெண் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

0 கருத்துக்கள் :