மகிந்தாவிற்கு ஆசி வேண்டி காரைநகரில் அஸ்வமேத யாகம்.(படங்கள் இணைப்பு)

31.5.13

சிறிலங்கா ஜனாதிபதியும் பிணந்தின்னிக் கழுகுமாகிய மகிந்த ராஜபக்ச வன்னியில் மக்களைப் படுகொலை செய்தமைக்கு பிராயச்சித்தம் தேடும் முகமாகவே காரைநகர் மணற்பிட்டி புகலி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் அஸ்வமேத மகா யாகம் நடத்தப்படுவதாக இரகசியமான தகவல்கள் தெரிவிக்கின்றன

மகிந்த ராஜபக்சவின் நேரடி கண்காணிப்பில் அவரின் மூன்று கோடி ரூபா நிதி உதவியுடன் நடத்தப்படுகின்ற இந்த யாகத்தின் இறுதி நாளான நாளை சனிக்கிழமை மகிந்த ராஜபக்ச குடும்ப சகிதம் காரைநகருக்கு வருகை தந்து இந்த யாகத்தில் கலந்துகொள்ளவுள்ளார் என்றும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.
மகிந்தவின் வருகைக்கு முன்னேற்பாடாக இந்த ஆலயச் சுற்றாடலில் பெருமளவான சிறிலங்கா படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருப்பதாக நம்பகரமாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக மேற்படி ஆலயத்தைச் சுற்றியும் கடற்கரையோரமாகவும் சிறிலங்கா விமானப் படையினரின் உலங்கு வானூர்திகள் வட்டமிட்டு கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றன.
போரிலே தமிழ் மக்களைக் கொன்றொழித்த மகிந்த தமிழ் மக்களின் நிலத்திலேயே அதற்கு பிராயச்சித்த யாகம் நடத்துகின்ற தகவல் ஏற்கனவே வெளிவந்தால் அது மக்களின் கடும் எதிர்ப்புக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகும் என்பதால் அவரின் வருகை இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கட்டாயம் அவர் நாளை வருகை தருவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த யாகத்தை காரைநகரில் நடத்துவதன் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியும் காரைநகரைச் சேர்ந்தவரும் மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுபவருமான விஜயகலா மகேஸ்வரன் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், நேரடியாக வருகை தந்து யாகத்தில் கலந்து கொண்டால் தமிழ் மக்களின் சபித்தலுக்கு உள்ளாக நேரிடுமே என்று மகிந்த அஞ்சுவதாகவும் மற்றொரு தகவலும் தெரிவிக்கின்றது. இதனால் தனது சார்பில் தனது குடும்பத்திற்கு நெருக்கமான வேறு உயர் பிரமுகர்களை அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது.

அஸ்வமேத யாகத்தின் வரலாற்றை நோக்குமிடத்து கடந்த பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் முனிவர்களால் அரசர்களுக்கு ஆசி வேண்டிச் செய்யப்பட்ட யாகமாக இது விளங்கின்றது. அதாவது, போரில் எதிரி நாட்டுப் படைகளைக் கொன்றொழித்த அரசர்கள் அந்தக் கொலைகளுக்கு பிராயச் சித்தமாக இந்த யாகத்தை நடத்தி வந்திருக்கின்றனர்.
இந்து மதத்தின் அடிப்படையிலுள்ள மிகப் பெரிய, மிகப் புனிதமான பிராயச்சித்த யாகமாக அஸ்வமேத யாகம் மட்டுமே விளங்குகின்றது. இந்தியாவை மையமாகக் கொண்டு தோற்றம் பெற்ற இந்த யாகமானது இந்திய மன்னர்கள் அயல் நாட்டு மன்னர்களை நோக்கிப் படையெடுத்துச் சென்று அங்கு லட்சக்கணக்கான மக்களைக் கொன்று வெற்றி வாகை சூடி மீண்டு வந்த பின்னர் நடத்தப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. தற்போது கூட இந்தியாவிலுள்ள அமைச்சர்களும் முக்கிய அரசியல்வாதிகளும் இந்த யாகத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் சிறிலங்காவில் இந்த யாகம் நடத்தப்படுவது குறைவானதாகும்.

ஆனாலும் 1983 ஆம் ஆண்டு சிறிலங்கா ஜனாதிபதியாக இருந்து பிரேமதாஸா அஸ்வமேத யாகத்தை நடத்தியிருந்தார். அந்த ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிரான இனக் கலவரம் நடைபெற்றது. இதில் பல உயிரழிவுகள் இடம்பெற்றன. இதைப் பார்த்து அஞ்சிய பிரேமதாஸா இதற்கு பிராயச்சித்தம் தேடும் முகமாக அப்போதைய அமைச்சராக இருந்து இராஜதுரையின் உதவியுடன் இந்த யாகத்தை நடத்தியிருந்தார். இதற்கு பின்னர் இப்போது மகிந்த ராஜபக்ச இந்த யாகத்தை நடத்துகின்றார். ஆக இது இலங்கையில் நடைபெறுகின்ற இரண்டாவது அஸ்வமேத யாகமாகும். இரண்டு யாகங்களும் தமிழ் மக்களை அழித்தவர்களின் பிராயச்சித்தத்திற்காகவே நடத்தப்பட்டிருக்கின்றது.

வன்னியில் இடம்பெற்ற இனப் படுகொலை யுத்தத்தின் மூலம் லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்த மகிந்த ராஜபக்ச தற்போது அதற்கு பிராயச் சித்தம் தேட முற்பட்டிருக்கின்றார். ஆன்மீகத்தில் படு மோசமான நம்பிக்கை கொண்ட கொலை வெறியன் மகிந்த ராஜபக்ச தனது படுகொலைகளுக்கு பிராயச்சித்தம் தேட முற்பட்டதன் விளைவாகவே காரைநகரில் அஸ்வமேத யாகம் நடத்தப்படுகிறது. இந்த யாகத்திற்காக பாகிஸ்தானின் வெள்ளைக் குதிரைகள் கண்டியிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. இந்தக் குதிரைகளின் பராமரிப்பாளர்களாக சிங்களவர்களே வருகை தந்துள்ளனர். அத்துடன் நெடுந்தீவிலிருந்தும் குதிரைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்தும் சிறிலங்காவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட சுமார் நாற்பது வரையான சிவாச்சாரியார்கள் இந்த யாகத்தை நடத்திவருவதாக மேற்படி  ஆலய பிரதம குரு தெரிவித்தார்.

“போரில் மரணித்த வீரர்கள் மற்றும் மக்களுக்கான தோஸ நிவாரணியாகவே இந்த யாகம் நடத்தப்படுகிறது” என்றும் மேற்படி ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சோமசுந்தரக் குருக்கள் கூறுகின்றார். இதேவேளை இந்த யாகத்திற்காக மேற்படி குருக்கள் அச்சிட்ட துண்டுப்பிரசுரங்களில் “நாட்டு மன்னருக்கு ஆசி வேண்டி நடத்தப்படும் யாகம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த யாகம் ஆரம்பமான நாளிலிருந்து ஆலயத்தைச் சுற்றி முப்பதுக்கு மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், நேற்றை தினம் பிற்பகலுக்கு பின்னர் பெருமளவான படையினர் இங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அதைவிட மூன்று தினங்களாக பிற்பகல் வேளை சிறிலங்கா விமானப் படையின் உலங்கு வானூர்திகள் வானில் வட்டமடித்து கண்காணிப்பு நடவடிக்கைளிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த உலங்கு வானூர்திகள் கடற் கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றன.
எனவே, இந்த யாகத்தின் இறுதி நாளான நாளை சனிக்கிழமை மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது மனைவி சிரந்தி ராஜபக்ச, அவரது புத்திரர்கள் மற்றும் கோத்தபாய ராஜபக்ச போன்றோர் வருகை தந்து இந்த யாகத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த யாகத்தின் மிக முக்கியமான அவிப்பொருளை மகிந்த ராஜபக்சவே யாக குண்டத்தில் இடுவார் என்றும் இரகசியமான தகவல்கள்  தெரிவிக்கின்றன.
மனிதாபிமான யுத்தம் என்ற ரீதியில் வன்னியில் நடத்தப்பட்ட இன அழிப்பு யுத்தத்தின் மூலமாக லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச அஸ்வமேத யாகமல்ல. காட்டில் பல ஆண்டுகாலம் தவம் இருந்தால் கூட இதற்கான பிராயச்சித்தத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. அவலமாகக் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் ஆன்மா மகிந்தவைத் துரத்திக்கொண்டேயிருக்கும். மகிந்த குடும்பம் நிம்மதியாக இருக்க முடியாது. மகிந்தவும் அந்தப் பாவியின் குடும்பமும் மிக விரைவில் பெரும் அழிவைச் சந்திக்கும். அந்த அழிவுதான் தமிழ் மக்களின் அஸ்வமேத யாகமாக இருக்கும். அதுவே எமது விடுதலைக்கான பாதையைத் திறந்து விடும். அதுவரை நாம் பொறுத்திருக்காமல் எமது விடுதலை நோக்கிய பணிகளை முன்னெடுப்போம்.

0 கருத்துக்கள் :