விபத்தில் காயமடைந்த சுவிஸ் தமிழ்ச் சிறுவனும் மரணம்

8.5.13

விடுமுறையைக் கழிப்பதற்காக சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை வந்த தமிழ்ச் சகோதரங்கள் விபத்தில் சிக்கிப் பலியாகிய சம்பவம் எல்லோரயும் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே சகோதரி மற்றும் உறவினரான ஒரு பெண் ஆகிய இருவர் இவ் விபத்தில் பலியாகினர்.இன்று அவ்விபத்தில் காயமடைந்த சிறுவனும் சிகிச்சை பலனின்றி மரணமானான்.
கொழும்பு வெள்ளவத்தை பகுதி வீதியில் பாதசாரிக் கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், கார் ஒன்று மோதியதில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் மகள் ஜனனி (16) உயிரிழந்ததுடன், ஜவீனின் சகோதரியின் மகள் (பாலசூரியன் வாரணி (29) படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு, மேலும் படுகாயமடைந்த ஜவீனின் மகன் ஜனன் (13) கொழும்பு வைத்தியசாலையில் தீவிர சிகிசைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது மரணமானான்.
 பொலிஸ் விசாரணைகளின் போது காரை ஓட்டி வந்த சாரதி மதுபோதையில் இருந்ததனால் இக் கோர விபத்து நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

தம் செல்வப் புதல்வர்கள் இருவரையும் பரிதாபமாக பறிகொடுத்த பெற்றோர் ஜவீன் ஜெயந்தி தம்பதியினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்களும், பிள்ளைகளுக்கு எம் கண்ணீர் அஞ்சலிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

0 கருத்துக்கள் :