புலிகளிடம் சிக்கியதா கறுப்புப்பெட்டி? முடிவுக்கு வந்தது மீட்புப் பணி

8.5.13

இரணைதீவுக் கடலில் நான்கு நாட்களாக நடத்தப்பட்டு வந்த லயன் எயர் விமானத்தின் சிதைவுகளை மீட்கும் பணி நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

இதுவரை இந்த விமானத்தின் ஆறு சிதைந்து போன பாகங்கள், பயணிகளின் உடைமைகள், பெண் ஒருவரின் அடையாள அட்டை, மனித எலும்பு எச்சங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த மீட்பு நடவடிக்கையில், விமானத்தின் கறுப்புப் பெட்டியை மீட்கின்ற முயற்சி வெற்றிபெறவில்லை.

விமானத்தின் கறுப்புப் பெட்டியை விடுதலைப் புலிகள் கைப்பற்றியிருக்கலாம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட விமான உதிரிபாகங்கள் அனைத்தும் பலாலி விமானப்படைத் தளத்தில் ஒப்படைக்கப்படும் என்று சிறிலங்கா தீவிரவாத தடுப்பு காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1998 செப்ரெம்பரில், பலாலியில் இருந்து இரத்மலானை நோக்கிச் சென்று கொண்டிருந்த அன்ரனோவ் 24 விமானம், விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகி வீழ்ந்ததாக கருதப்படுகிறது.

0 கருத்துக்கள் :