ரசாயன குண்டுகள் வீசி ராணுவம் தாக்கியது அம்பலம்

28.5.13


சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டம் நடந்து வருகிறது. பொது மக்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள புரட்சிப்படை ராணுவத்துடன் போரிட்டு வருகிறது. அவர்கள் மீது ராணுவம் ரசாயன குண்டுகளை வீசுவதாக புகார் எழுந்தது. ஆனால் அதை சிரியா அரசு திட்ட வட்டமாக மறுத்து வருகிறது. இந்த நிலையில், சிரியா ராணுவம் ரசாயன குண்டுகளை வீசி தாக்கியதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். நிருபர் ஜீன் பிலிப் ரெமி, போட்டோகிராபர் லாரன்ட் வான்டெர் ஸ்டாக்ட் ஆகியோர் உள்நாட்டு போர் செய்திகளை சேகரிக்க சிரியாவில் முகாமிட்டு இருந்தனர். அப்போது, தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அதை சுற்றியுள்ள ஜோபர் உள்ளிட்ட கிராமங்களில் புரட்சிபடை மீது சிரியா ராணுவம் ரசாயன குண்டுகளை வீசி தாக்கியது. இதனால் வெளியேறிய விஷ வாயுக்களால் வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டு இருந்தனர். இந்த தகவலை பத்திரிகை நிருபரும், போட்டோ கிராபரும் தங்களது பத்திரிகையில் செய்தியாக வெளியிட்டுள்ளனர். இது போன்ற உடல் நலக்குறைவால் கடந்த 4 நாட்களாக போட்டோகிராபர் அவதிப்பட்டதாக மற்றொரு நிருபர் லீ மோன்டீ தெரிவித்துள்ளார். கண்ணீர் புகை குண்டுகளை வீசினால் இது போன்ற உடல் நலக்குறைவு ஏற்படாது. ரசாயன குண்டுகலால் தான் இது போன்று ஏற்படும் என மாரான்ஸ் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே சிரியா ராணுவம் நடத்திய குண்டு வீச்சில் இங்கிலாந்தை சேர்ந்த இந்திய வம்சாவளி டாக்டர் உயிரிழந்தார். அவரது பெயர் இசா அப்துல் ரஹ்மான்(26). லண்டனில் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு சேவை மனப் பான்மையுடன் அவர் சிரியா வந்தார். இட்லிப் நகரில் ரகசியமாக ஆஸ்பத்திரி அமைத்து குண்டு வீச்சில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். ராணுவம் நடத்திய குண்டு வீச்சில் அவர் பலியாகி விட்டார்.

0 கருத்துக்கள் :