ஜெயலத் ஜெயவர்த்தன சிங்கப்பூரில் மரணம்

30.5.13

ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ஜெயலத் ஜெயவர்த்தன இன்று காலை சிங்கப்பூரில் காலமானார்.

சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மாரடைப்பை அடுத்து, அறுவைச் சிகிச்சைக்காக அவர் கடந்த வாரம் சிங்கப்பூர் சென்றிருந்தார்.

அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர், இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவராகப் பணியாற்றிய ஜெயலத் ஜெயவரத்தன, 1994ம் அண்டு ஐதேக சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.

கடந்த 19 ஆண்டுகளாக அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த அவர், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 கருத்துக்கள் :