நோயாளியை பலாத்காரம் செய்த மருத்துவர் கைது

16.5.13

அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர், தனது சொந்த கிளினிக்குக்கு சிகிச்சைக்காக வந்த 21 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் மருத்துவராக பணியாற்றி வரும் நரேந்திர சிங், தனது கிளினிக்குக்கு வந்த பெண்ணை, ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறி தண்ணீரில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக புகார் வந்துள்ளது. மருத்துவப் பரிசோதனையில் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானதை அடுத்து, மருத்துவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :