பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்

25.5.13


பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்(வயது 91) இன்று மரணம் அடைந்தார். மூச்சித்தி ணறலால் சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 1946 ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அவர் திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவரது மறைவு குறித்த செய்தி அறிந்ததும் திரைத்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மதுரையில் 24.3.1923 ம் தேதி அன்று மீனாட்சி ஐயங்காரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். முறையாக இசை பயின்று திரையுலகில் நுழைந்தார். திரைப்பாடல்கள் மட்டுமின்றி பக்திப்பாடல்களையும் பாடியு ள்ளார். இவரது பாடல்கள் இல்லையென்றால் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அமைந்திருந்தது டி.எம்.எஸ்ஸின் குரல். இசையுலகில் நீங்கா இடம்பிடித்த டி.எம்.எஸ். இன்று 25.5.2013 ல் பூமியை விட்டு சென்றார்

0 கருத்துக்கள் :