புத்தர் சிலையை அகற்றி பிள்ளையார் சிலை

7.5.13


மிகவும் துணிச்சலான இளைஞர்கள் புத்தர் சிலையை துக்கி எறிந்து பிள்ளையார் படத்தை மாட்டியுள்ளனர் இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரியகல்லாறு கிராமத்தின் அருகே அமைந்திருந்த புத்தர் சிலை நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் அபகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி களுவாஞ்சிகுடி பொலிசார் மீண்டும் அதே இடத்தில் பொலிஸ் சாவடி அமைந்து வருகின்றனர். புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த புத்த தூபி அடித்து நொறுக்கபபட்டுள்ளது தூபியினுள் இருந்த புத்தர் சிலையும் திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இப்புத்தர் தூபிக்குப் பக்கத்தில் இதுவரைகாலமும் இயங்கிவந்த பொலிஸ் சோதனைச் சாவடி கடந்த மாதம் கோட்டைக்கல்லாறு பகுதிக்கு மாற்றப்பட்டது.தற்போது புத்தர் சிலை திருடப்பட்டதாகத் தெரிவித்து மீண்டும் பெரியகல்லாற்றின் பழைய இடத்திற்கு குறித்த பொலிஸ் காவலரணை இடம்மாற்றி வருகின்றனர்

0 கருத்துக்கள் :