உயிர் தப்பியதால் நான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்

11.5.13

மரக்காணம் கலவரம் தொடர்பாக விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த 30ம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 12 சிறை வாசத்திற்கு பின்னர் இன்று(11.5.2013) திருச்சி சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை ஆனார். 9.30 மணிக்கு சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ கந்தக பூமியான இந்த சிறையில் (திருச்சி)மரங்கள் வெட்டப்பட்டு, நீண்ட நாள் பயன்படுத்தாத தூசி நிறைந்த அறையிலே என்னை அடைத்திருந்தார்கள். சிறைக்கு சென்ற முதல் நாள் வெறும் தரையில் போர்வை விரித்து படுத்திருந்தேன். சிறையில் வெப்பம் தாங்காமல் ஈரத்துணியை தலையிலும், உடம்பிலும் வைத்து படித்திருந்தேன். நான் இந்த சிறையில் ஹார்ட் அட்டாக்கிலோ, சன் ( சூரியன்) அட்டாக்கிலோ இறந்திருப்பேன். உயிர் தப்பியதால் நான் உங்களிடம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறேன்’’என்று தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :