மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து...

23.5.13

மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

மலையாள மொழியை செம்மொழியாக அறிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான காலிப் பணியிடங்களை நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சீரமைப்பால் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய கிடைக்கும்.
மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக வருமான வரித்துறையில் 20 ஆயிரத்து 751 கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
கிருஷ்ணா said :
அட இந்தியப் பதர்களே ! செம்மொழி தகுதி பெற இந்தியாவில் ஒரே ஒரு மொழிக்கு மட்டுமே தகுதி உள்ளது. முக்கியத் தகுதிகள், ஒரு மொழியானது இன்னொரு மொழியில் இருந்து நேரடியாக தோன்றியிருக்கக் கூடாது. அந்த மொழியின் சொற்களுக்கு வேறு மொழியில் வேர் சொல் தேடக் கூடாது. அந்த மொழியேலேயே வேர் சொற்கள் இருக்க வேண்டும். சொந்த மண்ணில் அந்த மொழியானது இலக்கண இலக்கிய வளங்களுடன் செழித்து வளர்ந்திருக்க வேண்டும். இப்படியான தகுதி இந்தியாவில் தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ளது. சமஸ்க்ரித மொழிக்கு கூட செம்மொழிக்கான எல்லா தகுதிகளும் இல்லை. இந்த நிலையில் மிகவும் பிற்காலத்தில் தமிழில் இருந்து பிரிந்து சமஸ்க்ரித கலப்புடன் தோன்றிய மலையாள மொழிக்கு செம்மொழி தகுதி என்பது எவ்விதத்திலும் நியாயம் இல்லை. இன்று மலையாள மொழிக்கு செம்மொழி தகுதி என்றால், நாளை இந்திய நாட்டின் வெளியே தோன்றிய, பல நவீன மொழிகளின் கலப்பால் உருவான, இலக்கியத் தொன்மை இல்லாத இந்தி மொழிக்கும் செம்மொழி தகுதியை இந்திய அரசு கொடுத்தாலும் வியப்பதற்கு இல்லை.

0 கருத்துக்கள் :