சீனாவுடன் மேலும் உடன்படிக்கைகள்! இந்தியா- இலங்கை உறவில் சிக்கல்?

28.5.13


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், இலங்கையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கான உடன்படிக்கைகள் கைச்சாத்தாகியுள்ளன.

குறிப்பாக கொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்கம் இடையில் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை ஒன்று சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையில் இன்று கைச்சாத்தானது.
யாழ்ப்பாணம்- கொழும்பு அதிவேக பாதை தவிர மேலும் வடமாகாணத்தில் புகையிரம பாதை நீடிப்புகளுக்கும் சீனா நிதி உதவி வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே வடக்கில் புகையிரத பாதை நிர்மாணப் பணிகளை இந்தியா மேற்கொண்டு வரும் நிலையில், சீனாவுடனான இந்த புதிய உடன்படிக்கையால் இராஜதந்திர ரீதியான சிக்கல்கள் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையில் நீடிக்கவும், கொழும்பு - கண்டி, குருணாகலை மாவட்டங்களுக்கு இடையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணிக்கவும் இந்த உடன்படிக்கையில் இணக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துக்கள் :