ராமதாஸ் கைதை கண்டித்து தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு

6.5.13

ராமதாஸ் மற்றும் அன்புமணி கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் கீழ்செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்ற பாண்டியன் கடந்த சனிக்கிழமை இரவு தீக்குளித்தார். அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிகிச்சை பலனின்றி அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு பாமகவைச் சேர்ந்த அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ கலையரசு அஞ்சலி செலுத்தினார். முன்னதாக நேற்று சவுமியா அன்புமணி மற்றும் பாமக முன்னணி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ கலையரசு, ராமதாஸ், அன்புமணி மற்றும் முன்னணி தலைவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு தமிழக காவல்துறை கைது செய்து வருகிறது. ராமதாஸ் சிறையில் கஷ்டப்படுவதை நினைத்து நினைத்து சொல்லொண்ணா துயரத்தில் ஜெகன் கடந்த ஒரு வார காலமாக இருந்து வந்துள்ளார்.

திடீரென சனிக்கிழமை இரவு பெட்ரோலை ஊற்றி தன்னையே மாய்த்துக்கொண்டுள்ளார். இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியுள்ளனர் என்றார்.

0 கருத்துக்கள் :