ஈழத்தமிழர் ஒருவர் கனடாவில் சுட்டு கொலை

31.5.13
கனடாவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஸ்காபரோ ரூச்ரிவர் பகுதியில் தமிழர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இறந்த நபர் 38 வயதுடைய சுரேந்திரா வைத்திலிங்கம் என போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். இவருக்கு 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. மார்பிலே குண்டுகள் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இவர் கொல்லபட்டுள்ளார்.
இதை பற்றி மேலும் தெரியவருவது யாதெனில், இன்று மாலை 3 மணியளவில் (May 30, 2013) தன்னுடைய வீட்டு பின்புறத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது வாகனத்தில் வந்த மூவரே இந்த துப்பாக்கி தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இந்த துப்பாக்கி தாக்குதலுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவரவில்லை என்றபோதும் 3 பேர் கொண்ட குழுவே வந்து தாக்குதல் நடத்தியதாகவும், நடத்தியவர்கள் இவரையே குறிவைத்து வந்து தாக்கிவிட்டு சென்றுள்ளதாகவும் போலிசார் தெரிவிக்கின்றனர்.
இது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசனுடைய தொகுதி என்பதுடன் அண்மைகாலமாக இப்பகுதியில் வன்முறைகள் அதிகரித்து காணப்டுகின்றது. கடந்த ஏப்ரல் 25 ம் திகதியன்றும் இன்று கொலை நடந்த இடத்தில இருந்து 200 மீட்டர் தொலைவில் இன்னொரு நபர் கொல்லப்பட்டதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :