தேரர் உடலில் தீ மூட்டி தற்கொலை செய்தமை ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி

30.5.13


போவத்தே இந்திரரத்ன தேரர் உடலில் தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டது நியாமானது அல்ல எனவும் எந்த சந்தர்ப்பத்திலும் இறுதி நேரத்தில் செய்ய வேண்டியதை ஆரம்பத்தில் செய்வது பொருத்தமற்றது எனவும் தேசபற்றுள்ள தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். மாடுகள் அறுக்கப்படுவது குறித்து திடீரென நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டமை ஏகாதிபத்தியவாத சூழ்ச்சியாகும். தேரர்கள் தீக்குளிக்க வேண்டுமாயின் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்கள் இருந்தன. ஸ்ரீமாகாபோதி மீதும் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட போதும், அரந்தலாவ பிக்குகள் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்திலும் தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதும் இவ்வாறான தற்கொலைகளை செய்திருக்க முடியும் எனவும் குணவங்ச தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :