பன்றிகள் கூட இருக்க முடியாத சிறையில் ராமதாஸ் அடைப்பு:

3.5.13


திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாசை, பி.டி.அரசகுமார் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.அரசகுமார், பாமகவை முடக்குவதற்காக அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை அடுத்தடுத்து கைது செய்துகொண்டிருக்கிறது தமிழக அரசு. ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. ஏனென்றால் திமுக அதிமுக என இரு கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளுக்கும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். கடலூர் சிறையில அடைக்காமல் கந்தக பூமியான திருச்சி சிறையில் பன்றிகள் கூட இருக்க முடியாத இடத்தில் அடைத்துள்ளனர். நீண்ட நாள் பயன்படுத்தாமல் இருந்த இந்த சிறைச்சாலையில் தூசி, குப்பை, நெடி இருப்பதினால் ராமதாஸ் மயக்கம் அடைந்து உடல் சோர்வாக உள்ளார். வெளியே ஒரு வன்முறை கூட்டம் பாமக என்ற பெயரில் வன்முறையை செய்ய காத்திருக்கிறது. அதற்கு அனைத்து சமுதாய மக்களும் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக இருக்க வேண்டும். காதல் நாடகத்தை தமிழ்நாடு முழுவதும் அடையாளப்படுத்தியதற்காகவே எனக்கு இந்த தண்டனை. என் குடும்பத்தினர் மீதும், யார் மீதும் வழக்குப் போட்டாலும் நான் பயப்படப்போவதில்லை. அதனை சந்திக்க தயார் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளதாக கூறினார். செய்தி, ஜெ,டி,ஆர்

1 கருத்துக்கள் :

John Bosco சொன்னது…

aarumai. pandriyodu erandu kattupanri, nagapambu, 1 lodu mattu sani aagiyavatrai aavar roomil pattuvittal innum aarumaiyag erukkum.