ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மறுவிசாரணை கோரும் மனு

29.5.13

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மறைக்கப்பட்ட உண்மைகளை கண்டறிய மறுவிசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சாந்தகுமரேசன் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

அதில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வீடியோ ஆதாரங்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளிக்கப்படவில்லை. இந்த வழக்கில் மறுவிசாரணைக்கு உத்தரவிடுவதன் மூலம் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிப்படும். விசாரணை முழுவதும் நிறைவடையாமலேயே முருகன், பேரரிவாளன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இந்த மூவருக்கும் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக மறுவிசாரணை நடத்த உத்தரவிடவேண்டு என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த வழக்கை ஏற்ற நீதிமன்றம் இன்று (29.05.2013), ஜுன் 5க்குள் வெளியுறவுத்துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டது. மேலும், ரா அமைப்பு, சி.பி.ஐ. துணை இயக்குநரும் பதில் அளிக்க வேண்டும் என்று ஆணைப்பிறப்பித்துள்ளது.

0 கருத்துக்கள் :