முக்கிய விடுதலைப் புலிக் கைதி, ஏனைய நான்கு கைதிகளுடன் தப்பியோட்டம்

28.5.13

முக்கிய தமிழீழ விடுதலைப் புலிக் கைதி ஒருவர் ஏனைய நான்கு கைதிகளுடன் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாத்தறை வெசாக் வலயத்தில் பணியாற்றுவதற்காக நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த சிறைக் கைதிகளும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட முக்கிய தமிழீழ விடுதலைப் புலிக் கைதி ஒருவரும், ஏனைய நால்வரும் வெசாக் வலயத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். வெசாக் வலயத்தில் கடயைமாற்றுவதற்காக 100 சிறைக் கைதிகள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். ஜெகதீஸ்வரன் என்ற தமிழீழ விடுதலைப் புலி கைதியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக அண்மையில் ஜெகதீஸ்வரன் என்ற கைதிக்கு ஐந்து ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கைதி ஒருவரின் தண்டனைக் காலம் எஞ்சியிருக்கும் நிலையில் இவ்வாறு பொதுப் பணிகளில் ஈடுபடுத்துவது சட்டவிரோதமானது என தெரிவிக்கப்படுகிறது. கைதிகளை கண்டு பிடிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது

0 கருத்துக்கள் :