ராஜபக்சேக்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது - கி.வீரமணி!

27.5.13

இலங்கையில் ஈழத் தமிழர் எழுச்சியை அறவே அடக்கி விட்டோம்; என்ற இறுமாப்புடன் அந்த இனத்தை பூண்டோடு அழித்தே தீருவேன் என்று சபதமேற்ற ராஜபக்ஷ குடும்பத்தினர், அந்தப் பணியில் பெரும் பகுதியை செய்து முடித்து வெற்றியை முத்தமிட்டு விட்டோம் என்று முழங்குகிறார்கள், ஆனால் அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: முள்ளி வாய்க்கால் படுகொலை சாதாரணமானதா? விடுதலைப்புலிகளின் வேட்டை என்ற பெயரால் ஈழத்து எழுச்சிச் சின்னங்களான இளைஞர்களை அறவே அழித்திட பல வகை முறைகளைக் கையாண்டுள்ளன. ஈழத்துத் தமிழச்சிகள் சுமார் 90 ஆயிரம் பேர் விதவைகள் என்ற கொடுமையைக் கண்டு வெற்றிப் புன்னகை புரிகின்றன – மனிதாபிமானமற்ற மரக்கட்டைகள்! இந்தக் கொடுமையாளர்களுக்கு – போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனையே கிடையாதா என்று வேதனையோடும், வெந்த நெஞ்சின் புண்களோடும் கேள்வி கேட்கும் மனிதநேயர்கள் அதிகம். ஆனாலும் நாம் உலக வரலாற்றை பார்க்கவேண்டும்.சர்வாதிகார ஆட்சி செய்தவர்கள் சிறைக்குப் அனுப்பப்பட்டார்கள்.குறிப்பாக, சட்ட விரோதமாக சொத்து சேர்த்து மற்றும் மனித உரிமைக் குற்றங்கள் புரிந்த, சிலி நாட்டின் அதிபர் பினோசெட் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு மரணமடைந்தார்.இனப்படுகொலைக் குற்றத்திற்காக கவுதமாலா நாட்டின் அதிபர் கொடுங்கோலனுக்கு 80 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.இந்த நிலையில் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேக்களும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. இது வரலாறு கற்பித்த – கற்பிக்கப் போகும் பாடமாகும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :