நான் தமிழன், தமிழன் என்று சொல்வதை பெருமையாக நினைக்கின்றேன்

24.5.13

தமிழ் நாகரீகம், 3000 வருடத்திற்கும் மேலான பழமைவாய்ந்தது.

எங்கள் மண், பல்வேறு இன ஆதிகத்திற்குள் சிக்கி, அழிக்கப்பட்டது.
எமது நிலங்கள், எமது செல்வங்கள் அபகரிக்கப்பட்டது, அழிக்கப்பட்டது
பல நூற்றாண்டு   காலமாக ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்தோம்.

ஒடுக்கப்பட்ட மக்களாகிய நாங்கள், அந்த மக்களின் விடுதலைக்காகவும், அவர்களின் சமாதான வாழ்வுக்காகவும் போராடினோம்.

நாங்கள் பல தடவை இடம்பெயர்ந்தோம், படுகொலை செய்யப்பட்டோம், சித்திரவதை படுத்தப்பட்டோம்.

எங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, கிளஸ்டர் குண்டுகள் எம்மை துரத்த, சதைகள் துண்டு துண்டாக சிதற ஓடினோம், காகித சருகுகள் போல பொஸ்பரஸ் குண்டுகளால் எரிந்தோம்.
நாம் கண்ட அந்தப் போர் இன்னும் எம்மை துரத்துகிறது, எம்மில் பலர் இன்னும் உடம்பு முழுவதும் வெடி சிதறல்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உலகின் சக்தி மிக்க  நாடுகளின் புவியியல் அரசியலுக்குள் சிக்கி அழியும் மக்களாக, எங்களை காப்பாற்ற முடியாமல், உலக  மக்கள் பார்வையாளர்களாக இருக்க, நாம் இந்த மண்ணில் கைவிடப்பட்டு இருக்கிறோம். இந்த விலை மதிக்க முடியாத மண்ணில்,  தமிழீழத்தில், வாழ பெருமை பெற்றவர்களாக இருக்கிறோம்.

அந்த மண்ணில் எமது மக்களினதும், மாவீரகளினதும் தியாக இரத்தங்கள் கலந்து அந்த மண்ணின் பெருமையை உயர்த்தி நிற்கிறது.
புலம்பெயர் நாடுகளில் நாங்கள் உயிருடன் இருக்க  போராடும் சகோதர சகோதரிகளே,
உங்களால் தான் நாங்கள் உயிருடன் இருக்கிறோம்.
இந்த  கொடுமையான, இயலாமை கொண்ட உலகத்திடம் சொல்லுங்கள்,  நாங்கள் மற்றவர்கள் முன் மண்டியிட மாட்டோம், அதைவிட  சாவதையே பெருமையாக நினைக்கிறோம்.

எங்கள்  ஒற்றுமையை உலகத்திற்கு காட்டுவோம்
சர்வதேசத்திடம் உண்மைகளை சொல்லுங்கள்,
எங்கள் தாய்மார், பிள்ளைகள் , குழந்தைகள் படும் அவலத்தை சொல்லுங்கள்.
ஆனால் நாம் மறக்க மாட்டோம்,
எங்கள் மேல் அவிழ்த்து விட்ட கொடுமைகளை மறக்க மாட்டோம்,
படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நாம் மறக்க மாட்டோம்.
மறக்கும் உரிமை எங்களுக்கு இல்லை.
நாங்கள் தமிழராக இருப்பத்தை பெருமையாக நினைக்கிறோம்.
ஈழத் தமிழர்கள் காலம் காலமாக தமிழின விடுதலைக்காக போராடிய போராடிக்கொண்டிருக்கும் பெருமையான இனம்.
அந்த இனத்தில் பிறந்ததை பெருமையாக நினைக்கிறோம்.

விடுதலை கிடைக்கும் வரை போராடுவோம்.

0 கருத்துக்கள் :