காணிகளை அரசாங்கம் சுவிகரிப்பதற்கு எதிராக கையொப்பம்

4.5.13

வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளை அரசாங்கம் சுவிகரிப்பதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஆவணங்களில் கையொப்பம் இடும் நிகழ்வில் நூற்று கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். வலி வடக்கு தெல்லிப்;பளை பிரதேச சபையின் தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை; இரண்டாவது நாளாக வழக்குத் தாக்கல் செய்வதற்க்கான ஆவணங்களில் கையொப்பம் இடும் நிகழ்வு அதிகாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் சுமார் 500க்கும் அதிகமான மக்கள் ஆர்வமாக கலந்து தமது கையொப்பங்களை இட்டனர். இந்த கையொப்பம் இடும் நடவடிக்கை தொடர்ந்து நாளையும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :