முள்ளிவாய்க்கால் நினைவு:போலீசார் தடை கூட்டம் நடத்திய சீமான்

18.5.13

நாம் தமிழர் கட்சியின் சார்பில், கடலூரில் இன்று மே 17 முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்து அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தனர். 

இந்நிலையில், இந்தப் பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை விதிக்கக் கோரி கடலூர் போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதில் பேரணிக்கு நீதிமன்றம் தடை விதித்தது.  இதனால் பொதுக்கூட்டம் நடத்த நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. ஆனால்  பொதுக்கூட்டத்துக்கும் போலீசார் தடை விதித்து, நாம் தமிழர் மாவட்டச் செயலர் வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர்.

இதையடுத்து தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தினர். இதில் சீமான் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

0 கருத்துக்கள் :