பிரபாகரன் படத்துக்கு தடை. கருணாநிதி ; புலிக்கொடிக்குத் தடை: ஜெயலலிதா

20.5.13

திராவிடப் பாரம்பரிய ஆட்சி என்று தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கருணாநிதியாக இருந்தாலும் சரி ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி ஈழத் தமிழ் மக்கள் விடயத்தில் நடந்து கொள்ளும் விதம் ஒன்று தான்.
ம.தி.மு.க தோழர் ஒருவர் சொல்வது போல தமிழகத்தில் தலைவர் பிரபாகரன் படம் ஏந்தவே கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த சண்டாளன் கலைஞர் கருணாநிதி தான்…
ஆனால் புலிக்கொடி, பிரபாகரன் படத்துக்கு தமிழகத்தில் திடீர் தடை விதித்து இருக்கின்றார் ஜெயலலிதா.
தமிழினத் தலைவர் என்று கூறி அடிக்கடி பாராட்டு விழாக்களை தனக்குத் தானே நடாத்தி கின்னஸ் சாதனைகள் புரிந்தவர் தான் இந்தக் கருணாநிதி. இப்படிப் பட்டவருக்கு அப்படியும் ஒரு ஆசை.
தன்னுடைய படத்தை ஏந்தி போராடினால் என்ன? என்று கருணாநிதிக்கு பெரும் நப்பாசை இருந்தது. அது இன்று வரை நடக்கவில்லை.

உலகம் முழுவதும் நடக்கும் ஈழ ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் தன்னுடைய படத்தை ஏந்தாமல் பிரபாகரனின் படத்தை ஏந்துவதால் கருணாநிதி அடிக்கடி கடுப்புக்கு உள்ளாவார்.

இதனை கருணாவின் வலது கையான பேராசிரியர் அன்பழகனிடம் கேட்டால் சொல்லுவார்.
கருணாநிதி சாகும் வரையோ செத்து பல நூறு ஆண்டுகள் ஆனாலும் அவரது ஆசை நிறைவேறாது.
ஆனால் இப்போது கருணாவையும் மிஞ்சி நாடகமாடுகின்றார் ஜெயலலிதா….
சிறிது நாட்கள் ஈழத் தமிழர்களின் மீட்பர் போல் ஈழத் தாய் வேஷம் போட்டார்….

நேற்று முன்தினம் கடலூரில் வெளுத்துவிட்டது அவரது வேஷம்….
ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்காக ஒன்றையும் பிடுங்கப் போவதில்லை என்பதனை அந்தச் சம்பவம் தெளிவாக உணர்த்திவிட்டது.
நேற்று முன்தினம் கடலூரில் புலிக்கொடிகள், பிரபாகரன் படம் வைத்திருந்ததாக கூறி ஜெயாவின் ஏவல் காவல் துறை ஏராளமான நாம் தமிழர் கட்சித் தொண்டர்களை கைது செய்துள்ளது.
இலட்சக்கணக்கான மக்களை முள்ளி வாய்க்காலில் கொன்றொளிக்கப்பட்டதை தொடர்ந்து ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அடையாளங்களை இனியும் தமிழகத்தில் தடை செய்யும் நிலை தொடர்ந்தால் அ.தி.மு.க வுக்கும் தமிழகத்தில் உள்ள காங்கிரசின் நிலை போல் ஏற்படலாம்.
மாவீரன் முத்துக்குமாரின் தற்கொடையைத் தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்ட மாபெரும் எழுச்சியினை நயவஞ்சகமாக அடக்கியதால் தான் கருணாநிதி கடந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்டார்.
இந்தச் சம்பவம் ஜெயாவின் ஞாபகத்தில் இருக்க கடவது…
எது எவ்வாறாயினும், ஈழத் தமிழர்கள் ஒரு விடயத்தை நன்றாகப் புரிந்து விட்டார்கள்.
தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்கள் விடயத்தில் இரண்டு நிலைப்பாடுகளை எடுப்பார்கள்,
ஒன்று தமது தேர்தல் அரசியல் தேவைக்கு பயன்படுத்திக் கொள்வது.
இரண்டு ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை கண்டும் காணாமல் விடுவது.1 கருத்துக்கள் :

சத்தியத்தின் கொடி பிடிப்போம்; சத்ருவின் தலை எடுப்போம்....!
இலட்சியத்தின் கொடி பிடிப்போம்; தமிழீழத்தை வென்றெடுப்போம்....!!
தர்மத்தின் கொடிபிடிப்போம்; தேசியத்தலைவரின் வழிநடப்போம்......!!!
கல்லறைப்பூக்கள்