பிரித்தானியா இலங்கைக்கு எச்சரிக்கை

16.5.13


சர்வதேசத்தின் கோரிக்கைகளை தொடர்ந்தும் இலங்கை உதாசீனம் செய்தால் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என பிரித்தானியாவின் பிரதிப் பிரதமர் நிக் கெலக் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார். பிரி;த்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் ஹக்ஸ் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை விவகாரம் தொடர்பில் சர்ச்சைகள் நிலவி வரும் தருணத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் டேவிட் கமரூன் பங்கேற்பது சர்ச்சைக்குரியது என்பதனை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பல பரிந்துரைகள் இதுவரையில் அமுல்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாற்றுச் சிந்தனையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளை தொடர்ந்தும் உதாசீனம் செய்தால் மோசமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடக் கூடுமென பிரதிப் பிரதமர் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் கொள்கைகள் கோட்பாடுகள் பற்றி பேசுவது மட்டும் போதுமானதல்ல அவை அமுல்படுத்தப்படுகின்றனவா என்பது கண்காணிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :