யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்!- சர்வதேச மன்னிப்புச் சபை

16.5.13

இலங்கையின் யுத்த குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திலான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு, மன்னிப்பு சபை எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 23வது மாநாட்டு இந்த மாதம் 27ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியாக வலியுறுத்தப்பட்ட நிலையிலும், அரசாங்கம் மனித உரிமைகள் விடயங்களில் தோல்வி கண்டுள்ளது.
இந்த நிலையில் சர்வதேச தரத்தினாலான விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் இருந்து பாதுகாப்பு கோருகின்றவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை சரியான முறையில் செயற்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை தமது கடிதத்தில் கோரியுள்ளது.

0 கருத்துக்கள் :