மத்தளயில் விமான நிலையத்துக்கு பதிலாக குளத்தை கட்டியிருக்கலாம்

23.5.13

மத்தளயில் சர்வதேச விமான நிலையத்தை கட்டியதற்கு பதிலாக அங்கு குளம் ஒன்று கட்டியிருந்தால் மஹா பராக்கிரமபாகு போன்று ராஜபக்ஷ பெயரும் வரலாற்றில் பதிவாகியிருக்கும் என்று தெரிவித்துள்ள பொதுபலசேனா ஜனாதிபதியை சூழவுள்ள ஆலோசகர்கள் இவ்வகையான பயனற்ற திட்டங்களை ஜனாதிபதிக்கு கூறி மக்களின் நிதிக்கு ஆப்பு வைக்கக் கூடாது என்றும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பொதுபலசேனாவின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போது மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகையில்,

ஜனாதிபதியை சூழவுள்ள ஆலோசகர்கள் புதுமையானவர்கள். விசித்திரமான ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்கள். உண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நான் ஆலோசகராக இருந்திருந்தால் நிச்சயம் மத்தளயில் விமான நிலையத்தை கட்ட அனுமதித்திருக்க மாட்டேன். மாறாக பராக்கிரம சமுத்திரம் போன்று பாரிய குளத்தை கட்டுமாறு வலியுறுத்தியிருப்பேன் எனக் கூறினார்

0 கருத்துக்கள் :