போலீசார் அதிர்ச்சி கைதான நடிகை 9 சொகுசு கார்கள்

30.5.13

வங்கியில் கடன் வாங்கி, மோசடி செய்த வழக்கில், டில்லியில் , சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால், கைது செய்யப்பட்ட, மலையாள நடிகை, லீனா மரியா பால், இன்று சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். டில்லியில் லீனா, அவரது காதலர் ஆகியோர் தங்கியிருந்த மிகப் பிரமாண்டமான பண்ணை வீட்டில், போலீசார் நடத்திய சோதனையில், 81 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் சிக்கின. மேலும், விலை உயர்ந்த,"ரோல்ஸ் ராய்ஸ்' கார் உள்ளிட்ட, ஒன்பது கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இவற்றையும், போலீசார் கைப்பற்றினர். நடிகை லீனாவிற்கு, காதல் கணவர், மோசடி பணத்தில், கார்களை வாங்கித் தந்ததாக கூறப்படுகிறது. இன்று அழைத்துவரப்பட்ட பின், விசாரணை நடத்தும் போது, மோசடியின் வலை மேலும் விரியலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

0 கருத்துக்கள் :