அமெரிக்காவில் சரக்கு ரெயில்கள் மோதல்: 7 பேர் காயம்

26.5.13

அமெரிக்காவில் உள்ள மிசௌரியில் நேற்று சென்று கொண்டிருந்த இரு சரக்கு ரெயில்கள் மோதிக்கொண்டன. இதில் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு விழுந்தன. அப்போது ரெயில் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது. மேம்பாலத்து அடியில் இந்த விபத்து நடந்ததால், பாலத்தின் தூண்கள் இடிந்தன. இதனால் பாலமும் இடிந்து விழுந்தது. அப்போது அதில் பயணித்த வாகனங்களும் சேதமடைந்தன. இதில் சிக்கிய 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த மீட்புப்படையினர் பணிகளை மேற்கொண்டுள்ளனர்

0 கருத்துக்கள் :