இலங்கைக்கு 54 நாடுகளின் தலைவர்கள் விஜயம் செய்ய உள்ளனர்: சிங்கள ஊடகம்

12.5.13

54 நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது,

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்த அரச தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 15, 16ம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
பிரிட்டனின் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் பிரதமர் டேவிட் கமரூனின் இலங்கை விஜயத்தை தடை செய்ய தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் கடும் முயற்சி எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :