நேட்டோ படைகள் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 15 பேர் பலி

16.5.13


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சென்ற நேட்டோ படைகளின் மீது இன்று காலை குண்டுகள் நிரப்பப்பட்ட காரைக் கொண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 ராணுவ வீரர்கள், 4 ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் 9 பேர் என மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர். குண்டுகள் நிரப்பப்பட்ட டயோட்டா காரில் வந்து தலிபான்கள் நடத்திய இந்த தற்கொலைப்படை தாக்குதலை ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய் கண்டித்துள்ளார்.

0 கருத்துக்கள் :