மேலும் 10 வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு? பிடிபட்ட 3 பேரும் ஒப்புதல்!

19.5.13

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அப்போது பிடிபட்ட 3 பேரும், குறைந்தபட்சம் 5 ஐ.பி.எல். அணிகளை சேர்ந்த 10 கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த சூதாட்டத்தில் பங்கு உள்ளது என்று தெரிவித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனாலும் எங்கள் விசாரணை பாதிக்கும் என்பதால் அந்த 10 பேரின் பெயர்களை வெளியிட முடியாது என்று மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த்
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட புகாரின் பேரில் மும்பையில் ஸ்ரீசாந்தை கைது செய்த டெல்லி போலீசாரை அவர் மிரட்டிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மும்பையில் உள்ள ஆடம்பர ஓட்டலில் டெல்லி போலீசார் ஸ்ரீசாந்தை கைது செய்த போது, தனது செல்போனை போலீசாரை நோக்கி வீசிய அவர், ‘யார் கிட்ட பேசணும்?. மகாராஷ்டிரா முதல் மந்திரி கிட்ட பேசறீங்களா? கேரள முதல் மந்திரி கிட்ட பேசறீங்களா?’ என்று போலீசாரையே மிரட்டும் தோரணையில் கூறியுள்ளார்.

போலீஸ் நிலையத்திற்கு போகும்வரை போலீசாருடன் ஒத்துழைக்காமல் 'வயலண்ட்'டாக இருந்த ஸ்ரீசாந்த், இவரை வரவேற்க ஏற்கனவே கஸ்டடியில் சூதாட்ட தரகர்கள் அமர்ந்திருப்பதை பார்த்ததும் ‘கப்-சிப்’ என்று 'சைலெண்ட்'டாக ஆகி விட்டதாக போலீஸ் வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.

0 கருத்துக்கள் :