புலிகளிடம் இல்லை GUN ஆனால், புலிகளுக்கு ராஜபக்ஷே மீது கண்

24.4.13


இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து விடுதலைப் புலிகளிடம் இருந்து ஆயுதங்கள் அகற்றப்பட்டன. ஆனால், வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் இலங்கை ஜனாதிபதியின் அதிகாரத்தின் மீது வைத்திருக்கிறார்கள் ஒரு கண்” என்று தெரிவித்துள்ளார், இலங்கை அமைச்சர். நேற்று கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை இணை அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, “இலங்கைக்கு வெளியேயுள்ள புலிகள், மற்றும் அவர்கள் ஆதரவாளர்களால் ஈழம் அமைப்பதற்கு சர்வதேச ரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையில் தீவிரவாத சவால்களை வெற்றிகரமாக எதிர்நோக்கிய ஜனாதிபதியின் அதிகாரத்தின் மீது கண் வைத்துள்ள இந்த சக்திகள், அதிகாரம் மிக்க அந்த பதவியை ஒழித்துக்கட்ட திட்டம் போடுவதாக தெரியவந்துள்ளது. மற்றொரு புறமாக, ட்ரான்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் ஜே.சீ. வெலியமுன போன்றவர்கள் இலங்கையில் புதிய அரசியலமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றனர். இவை அனைத்தையும் சமாளித்து வெற்றி கொள்வார் ராஜபக்ஷே” என்றார்.

0 கருத்துக்கள் :