வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் : சரத் பொன்சேகா

14.4.13

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த காரணத்திற்க்காக சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். உள்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தின் பின்னர் சில முக்கியமான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் ஊடகங்கள், அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும் குறிபிட்டுள்ளார் மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அரசியல் ரீதியாக தம்மை நேருக்கு நேர் சந்தித்து பேச அஞ்சுவதாவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :