சரத்பொன்சேகா கட்சிக்கு அங்கீகாரம்

1.4.13

இலங்கை முன்னாள் ராணுவ தளபதியாக இருந்தவர் சரத்பொன்சேகா (62). பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், ஜனநாயக கட்சியை துவக்கினார். 2010- அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். முன்னதாக கட்சியை பதிவு செய்ய கோரி தேர்தல் கமிஷனுக்கு மனு செய்தார். ‌அப்போதைய தேர்தல் கமிஷனராக இருந்த தயானந்தா திசநாயகா, தள்ளுபடி செய்தார். இது தொடர்பாக மனித உரிமை கமிஷனிடம் அப்பீல் செய்தார். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தற்போதைய தேர்தல் கமிஷனராக உள்ள மகிந்தா தேஷாப்ரியா, சரத் பொன்சேகா கட்சிக்கு அங்கீகாரம் அளித்தார்.

0 கருத்துக்கள் :