காதலியைக் வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் கண்ட காதலன் தற்கொலை

27.4.13

தன்னைக் காதலித்த பல்கலைக்கழக மாணவி வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் காரில் ஊருக்கு வந்து இறங்கியதைத் தாங்க முடியாத யாழ் பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இருபாலை கிழக்கில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. ஆனால் இதனை சில ஊடகங்கள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டார் என்றே செய்தி வெளியிட்டுள்ளது.

நீண்ட காலமாக காதலித்த தனது காதலி இந்தியாவுக்கு வழிபாட்டு ஸ்தலத்திற்கு குடும்பத்துடன் சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளார். இந்தப் பெண் ஊருக்கு வரும் போது திருமணம் முடித்து புது மாப்பிள்ளையுடன் காரில் செல்வதைக் கண்டதினால் இவர் உயிரை மாய்த்துள்ளதாகவும் உயிரிழந்தவரின் நண்பர்கள் அதிர்வுக்கு தெரிவித்துள்ளார்கள்.

யாழ். பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் பிரிவில் 3 ஆம் வருடத்தில் கல்வி பயின்று வந்த 23 வயதுடைய ஞானேந்திரன் பிரசாத் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்துக்கள் :