முன்னாள் போராளிகளிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

27.4.13

பொது மக்கள் மற்றும் முன்னாள் புலிப் போராளிகளாக இருந்து புனர்வாழ்வு பெற்றவர்களையும் அணுகி வேலை பெற்றுத்தருவதாகவும், வாகனங்களை வட்டியில்லாக் கடனுக்கு பெற்றுத் தருவதாகவும் கூறி பலரிடம் மோசடி செய்து வந்த நபர் ஒருவர் அவரால் பாதிக்கப்பட்டவர்களினால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தாவடிப் பகுதயில் இவ்வாறு ஏமாற்றி புனர் வாழ்வு பெற்றவந்த முன்னாள் போராளிகள் மற்றும் பொது மக்களிடம் வேலை பெற்று தருவதாகவும் வாகனம் பெற்றுத் தருவதாகவும் கூறியதுடன் முப்பதாயிரம் ரூபா முதல் ஐம்பதாயிரம் ரூபா வரையில் வங்கி இலக்கம் ஒன்றைக்கொடுத்து வங்கியில் பணத்தை வைப்பிடுங்கள் எனக்கூறி பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகியுள்ளார். நேற்று பகல் குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் பகுதயில் நிற்பதைக் கண்ட பாதிக்கப்பட்ட இளைஞர்கள் குறித்த இளைஞரை பிடித்து கிராம அலுவலரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபர் சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞரிடம் இருந்து பல கையடக்கத் தொலைபேசிகள், சிம்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

0 கருத்துக்கள் :