இந்தியாவுடன் முரண்பாடுகள் வேண்டாம்; டியூ. குணசேகர

14.4.13


இலங்கையின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கள் புத்தியுடன் செயற்பட வேண்டுமென சிரேஸ்ட அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். குறிப்பாக அமைச்சின் பேச்சாளர்கள் மற்றும் எதிர்காலத்தை கவனத்திற் கொண்டு கருத்து வெளியிட வேண்டும் எனவும் பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகப் பொருளாதார முறைமை காணப்படும் நிலையில் சர்வதேச நாடுகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. குறிப்பாக இந்தியாவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாதெனவும் ஆர்.பிரேமதாச, ஜே.ஆர்.ஜயவர்தன போன்ற ஜனாதிபதிகள் இந்தியாவை பகைத்துக் கொண்டதனால் ஏற்பட்ட விளைவுகளை கவனத்திற்கொள்ள வேண்டும். சில அடிப்படைவாத சக்திகள் தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் பகைமைப்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் சிங்கள தமிழ், சிங்கள முஸ்லிம் பிளவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயற்சிக்கப்படுவதாக தெரிவித்துள்ள சிரேஸ்ட அமைச்சர், இதன் மூலம் வெளிநாட்டு சக்திகள் நாட்டின் விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடிய சாத்தியம் ஏற்படுமெனவும் எச்சரித்துள்ளார்.

0 கருத்துக்கள் :