இலங்கையிலேயே பொதுநலவாய மாநாடு ! இன்று இறுதி முடிவு

26.4.13

பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை என்று பொதுநலவாய செயலகம் அறிவித்துள்ளது.
லண்டனில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுநலவாய தலைமைச் செயலர் கமலேஷ் ஷர்மா இந்த முடிவை அறிவித்துள்ளார்.
2013-ம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த நிலையிலேயே தமது முடிவில் மாற்றமில்லை என்று பொதுநலவாய செயலகம் அறிவித்துள்ளது.
பொதுநலவாய மாநாடு நடத்தப்படும் இடத்தை இலங்கையிலிருந்து மாற்றுமாறு வலியுறுத்தி லண்டன் தமிழர்கள் பொதுநலவாய செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
23-வது பொதுநலவாய மாநாடு இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 15 முதல் 17-ம் திகதி வரையான காலப்பகுதியில் நடக்கவுள்ளது.

0 கருத்துக்கள் :