பொஸ்டன் மரதன் குண்டுவெடிப்பு: சந்தேக நபர்களின் படங்களை வெளியிட்டது எப்.பி.ஐ

19.4.13

அமெரிக்காவின் பொஸ்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் சந்தேக நபர்கள் இருவரின் படங்கள் மற்றும் காணொளிகளை எப்.பி.ஐ. வெளியிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ. படங்களில் இரு சந்தேக நபர்களும் பைகளை அணிந்தவாறு காணப்படுகின்றனர்.எனினும் பொதுமக்கள் இருவரையும் எங்காவது கண்டால் அவர்களிடம் அணுகுவதை தவிர்க்குமாறும் எப்.பி.ஐ. வேண்டுகோள் விடுத்துள்ளது.

0 கருத்துக்கள் :