இலங்கை ராணுவத்தை விரும்பி அழைக்கிறது ஐ.நா.!

2.4.13


இரட்டை நிலைப்பாடு” என்ற சொற்பதத்துக்கு அர்த்தம் தெரிய வேண்டுமா? அதிக தொலைவு போக தேவையில்லை. இலங்கையில் எட்டிப் பாருங்கள். அல்லது, ஐ.நா.விடம் கேட்டுப் பாருங்கள். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்த பிரேரணை கொண்டுவருவது ஒருபுறம் நடக்க, மறுபுறம், ஐ.நா.வின் அமைதிப் படையில் பணிபுரிய இலங்கை ராணுவத்தை சேர்ந்த 400 வீரர்கள் இன்று இலங்கையில் இருந்து புறப்பட்டு சென்றனர். ஹைதி (Haiti) நாட்டில் உள்ள ஐ.நா. அமைதிப்படையில் (UN Peace Keeping Mission in Haiti – MINUSTAH) இலங்கை ராணுவத்தை சேர்ந்த வீரர்களையும் இணைத்துக் கொண்டுள்ளது, ஐ.நா. (மேலேயுள்ள போட்டோவை பார்க்கவும். யூனிபார்மில் ஐ.நா. பேட்ச்சுடன் இலங்கை ராணுவ வீரர்கள்) மொத்தம் 750 இலங்கை ராணுவ வீரர்களை அமைதிப் படையில் பணிபுரிய அனுப்பி வைக்குமாறு இலங்கை அரசிடம் ஐ.நா. கோரிக்கை விடுத்ததை அடுத்து, இன்று இலங்கை ராணுவத்தின் சின்ஹா ரெஜிமென்ட் படைப்பிரிவில் இருந்து 400 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை ராணுவத்தை சேர்ந்த 750 வீரர்கள் உட்பட, இலங்கை முப்படைகளையும் சேர்ந்த மொத்தம் 1,071 பேரை அனுப்பி வைக்கும்படி கோரியிருக்கிறது, ஐ.நா. “இலங்கை ராணுவ வீரர்கள் ஹைதி நாட்டின் அனைத்து நகரங்களிலும், வீதி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மக்களை வன்முறையாளர்களிடம் இருந்து காப்பாற்றும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது, ஐ.நா. ஆமா… இந்த ராணுவ வீரர்கள்தான் இலங்கை யுத்தத்தில் போர்க் குற்றம் புரிந்தார்கள் என ஐ.நா. தீர்மானம் கொண்டுவர முயற்சிகள் எடுத்ததாக சொன்னார்களே… ஐ.நா. அமைதிப் படையிலும் இவர்கள்தானா? என்னங்க அர்த்தம் இதற்கு? ஏதாச்சும், புரிகிறதா? ஐ.நா.வில் சும்மா விளையாடுறாங்களா?

0 கருத்துக்கள் :